உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது நடைமுறைப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கடிதம் கிடைத்த சில மணித்தியாலங்களில் அந்த பதவியை நிராகரித்து ஜனாதிபதிக்கு பதில் கடிதம் அனுப்ப முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், அவர் அலுவலக வசதிகளையோ அல்லது தனக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மறுத்துவிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.