மாணவியை கடத்த முயன்ற போதே காப்பாற்றிய பெண்!

0
467

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி அணிந்திருந்த ஆடையை கழற்றி, அதன் மூலம் குறித்த சிறுமியின் கைகளைக் கட்டி அவரைக் கடத்திச் செல்ல நபர் ஒருவர் முயற்சித்துள்ளார்.

அப்போது, ​​அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் குதித்து சிறுமியை காப்பாற்றியதாக இரத்தினபுரி பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் (26) இன்று இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இச்சிறுமி இன்று காலை வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது ​​புதருக்குள் மறைந்திருந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த ஆடையால் கைகளை பின்னால் கட்டிக் கடத்த முயன்ற போதே அந்தப் பெண்ணால் காப்பாற்றப்பட்டுள்ளார்.