வவுனியாவில் பரவிய தீ  (Video)

0
506

வவுனியா – இரட்டைபெரியகுளம் நுவர பிரதான வீதிக்கு அருகில் நேற்று (24) இரவு தீ பரவியுள்ளது.

தீயினால் தொலைபேசி வயரிங் அமைப்பு மற்றும் வீதியோரங்களில் சிவில் பாதுகாப்பு அமைப்பினரால் நடப்பட்டிருந்த பல மரங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த நபர் ஒருவர் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.