துறைமுகத்தில் இயக்குனர்களாக வலம் வரும் பெண்கள்!

0
398

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் அமைச்சின் கீழுள்ள ஏனைய நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக செயற்பாடுகளை விரிவுபடுத்துமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

உலகின் பல நாடுகளைப் போன்று இலங்கையிலும் துறைமுகத்தில் பாரம் தூக்கி (கிரேன்) இயக்குநர்களாக பெண்களும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் மேலும் பலரை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான அமைச்சு ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.