ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மகன்; தாயின் வங்கி கணக்கில் மோசடி

0
542

ரக்வான பிரதேசத்தில் இணைய விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர் ஒருவர் தனது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாவை மோசடியான முறையில் பெற்று இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் பதினைந்து வயது மாணவன் இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதால் இணையம் மூலம் கல்வி கற்க பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கையடக்க தொலைபேசி ஒன்றை வழங்கியுள்ளனர்.

மாணவரின் தாயார் அரச அலுவலகத்தில் பணிபுரிபவர் எனவும் தந்தை வர்த்தகர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவன், ஒன்லைன் மூலம் கல்வி கற்காமல், ஒன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளார்.

இணைய விளையாட்டுக்கு அடிமையான மகன்; தாயின் வங்கி கணக்கில் மோசடி | Son Addicted To Internet Games

தாயின் பெயரில் உள்ள வங்கி கணக்கு தொடர்பான தகவல்களுக்கு மகனின் தொலைபேசி இலக்கத்தை வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அவரது வங்கிக் கணக்கின் தரவுகள் அனைத்தும் மகனின் தொலைபேசியில் கிடைத்துள்ளதுடன், இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாணவன் சில காலமாக ஒன்லைன் விளையாட்டுகளை விளையாடியுள்ளார்.

இது தொடர்பில் எதுவுமே தெரியாத தாய், நேற்று முன்தினம் வங்கிக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். ​​தனது கணக்கில் இரண்டு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் குறைவாக இருந்ததை அறிந்த தாய், வங்கியில் முறைப்பாடு செய்துள்ளார்.

கணக்கை கண்காணித்த அதிகாரிகள் தாயின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி ஒன்லைன் விளையாட்டுகளுக்கு மகன் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.