அதிவிரைவில் வீட்டிற்கு செல்லவுள்ள அரச ஊழியர்கள்!

0
577

அதிக பணியாளர்கள் உள்ள அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறைந்த பணியாளர்களுடன் இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை வரவேற்பதாக இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சங்க அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இது ஒரு நீண்ட கால வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர், அரசாங்கம் இதனை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

விரைவில் வீட்டிற்கு செல்லவுள்ள அரச ஊழியர்கள்! | Civil Servants Who Will Go Home Soon

100 ஊழியர்கள் வேலையை 50 ஊழியர்கள் செய்யலாம்

100 ஊழியர்களால் செய்யப்படும் சில அரசு நிறுவனங்களின் வேலையை, 50 ஊழியர்களால் கூட செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

விரைவில் வீட்டிற்கு செல்லவுள்ள அரச ஊழியர்கள்! | Civil Servants Who Will Go Home Soon

எனவே, அதிக பணியாளர்கள் உள்ள நிறுவனங்களில் இருந்து, போதுமான எண்ணிக்கையிலான பணியாளர்கள் இல்லாத நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஒதுக்கீடு செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.