ஆறு மாதங்களில் வருவு 919 பில்லியன்; செலவு 1822 பில்லியன்!

0
437

2022 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி ரூ. 919.5 பில்லியன் என கூறப்படுகின்றதுடன் இது கடந்த அண்டை விட 28.54% வளர்ச்சி எனவும்குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த காலகட்டத்தில், அரசின் வரி வருவாய் ரூ. 641.2 பில்லியன் – ரூ. 798.8 பில்லியன்களாகும் , மற்றும் வரி அல்லாத வருவாய் ரூ. 73.3 பில்லியனிலிருந்து ரூ. 119.7 பில்லியனாக அதிகரித்துள்ளது.

ஆறு மாதங்களில் வருமானம் 919 பில்லியன்;  செலவு 1822 பில்லியன்! | 919 Billion In Income In Six Months

அரசாங்கத்தின் செலவு அதிகரிப்பு

ஆனால், இந்தக் காலகட்டத்தில் அரசாங்கத்தின் செலவு ரூ. 1,495.5 பில்லியனில் இருந்து ரூ. 1,822.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.

ஆறு மாதங்களில் வருமானம் 919 பில்லியன்;  செலவு 1822 பில்லியன்! | 919 Billion In Income In Six Months

அத்துடன் தொடர் செலவுகள் ரூ. 1,311.0 பில்லியனில் இருந்து ரூ. 1,571.6 பில்லியன் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் கழித்த பிறகு மூலதனச் செலவு ரூ. 184.5 பில்லியனில் இருந்து ரூ. 250.5 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.