பிரிட்டிஷ் ராணி புதைக்கப்படும் கல்லறை பற்றி வெளியான ரகசியம்!

0
633

பிரித்தானிய ராணியார் 2ம் எலிசபெத் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரின் உடலுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இன்று உலக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இங்கிலாந்து நேரப்படி இன்று மாலை உடல் அடக்கம் செய்யப்படுகிறது. அவரின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் உள்ள விண்ட்சர் கோட்டை மைதானத்தில் உள்ள கல்லறையில் ராணியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

பிரித்தானிய ராணியார் அடக்கம் செய்யப்படவுள்ள  கல்லறை குறித்து  வெளியான ரகசியம்! | Secret Revealed Queen Will Be Buried

கல்லறை ரகசியம்

இந்த கோட்டையின் தரையில் இருந்து சுமார் 16 அடி அதாவது 5 மீட்டர் கீழே உள்ளது தான் கல்லறை. இங்கு அரச குடும்பத்தினரின் உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யப்படுகிறது.

பிரித்தானிய ராணியார் அடக்கம் செய்யப்படவுள்ள  கல்லறை குறித்து  வெளியான ரகசியம்! | Secret Revealed Queen Will Be Buried

இந்த அரண்மனை ஏறக்குறைய 1000 ஆண்டுகள் மன்னர் ஆட்சிக்கு சொந்தமானது. இந்த அரண்மனை ராணி 2ம் எலிசபெத்தின் மறைவு வரை முக்கிய இடமாக இருந்து வந்தது.

இங்கு உள்ள பெட்டகமே ஒரு கல்லறை என கூறப்படுகின்றது. 70 அடி நீளமும் (21 மீ) 28 அடி அகலமும் ( 8 மீட்டர் ) நுழைவாயிலில் அரும்பு கோட்டை மூலம் எப்போதும் மூடப்பட்டிருக்கும்.

பிரித்தானிய ராணியார் அடக்கம் செய்யப்படவுள்ள  கல்லறை குறித்து  வெளியான ரகசியம்! | Secret Revealed Queen Will Be Buried

சுவர்களில் கட்டப்பட்ட அலமாரிகள்

இந்த அறைக்குள் 44 உடல்களை வைக்க போதுமான இடம் உள்ளது.

இதுவரை அங்குள்ள கல்சுவர்களில் கட்டப்பட்ட அலமாரிகளில் சவப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள 12 அறைகள் மையத்தில் உள்ளன.

ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள சவபெட்டியானது லிப்ட் மூலம் கல்லறைக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகின்றது.

பிரித்தானிய ராணியார் அடக்கம் செய்யப்படவுள்ள  கல்லறை குறித்து  வெளியான ரகசியம்! | Secret Revealed Queen Will Be Buried

அதேவேளை செயின்ட் ஜார்ஸ் தேவாலயத்தில் 15 ஆம் நுாற்றாண்டிலிருந்து அரச குடும்பத்தில் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

ராணி எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறையில் 25 அரச குடும்பங்களின் உறுப்பினர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களில் மன்னர்கள், மற்றும் அவர்கள்து மனைவிகள், குழந்தைகள் அடங்குவார்கள் எனவும் கூறப்படுகின்றது.