அமானுஷ்ய சக்தி மூலம் வயிற்றில் குழந்தையை உருவாக்குவேன்: 12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த நபர் கைது!

0
443

ஒத்துழைக்க மறுத்தால் அமானுஷ்ய சக்தியின் மூலம் வயிற்றில் குழந்தையை உருவாக்குவேன் என 12 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தவர் கைது. தனது கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஆபாச வீடியோக்களை பார்க்க மறுத்தால் பிரபஞ்ச சக்தியின் மூலம் வயிற்றில் குழந்தையை உருவாக்குவேன் என மிரட்டி 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்திய காமுகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபஞ்ச சக்தியின் மூலம் நோய்களை குணப்படுத்துவதாக குறிப்பிட்டு சிகிச்சை நிலையமொன்றை நடத்தும் ஆசாமியே கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பல்லேவெல பிரதேசத்தில் கிளினிக் ஒன்றை நடத்தி சுகப்படுத்துதல் சேவைகளை வழங்கி வரும் விலாபொல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச காட்சிகளைக் காட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்.

சம்பவத்தின் பின் அசாதாரண மாற்றத்திற்குள்ளான சிறுமி பாடசாலை செல்லாமல் வீட்டில் இருக்கத் தொடங்கினார். சிறுமியின் மாற்றங்களையடுத்து தாயார் தீவிரமாக தேடியதையடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.