டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ள நிலையில் அவர்களை வீடுகளுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாயதுன்னே தெரிவித்தார்.
இதனடிப்படையில், டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 60 வயதை பூர்த்தி செய்யும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணி ஓய்வு விண்ணப்பங்களை நிறுவன தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை வெளியீடு
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை நேற்று முன்தினம் அமைச்சின் செயலாளர் மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையில், பணி மூப்பு மற்றும் ஓய்வூதியத்தை பாதிக்காத வகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு ஊதியமில்லாத விடுமுறை வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கையும் நேற்று (15) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.