முட்டை விற்பனை செய்யும் சிறிய கடையொன்றில் முட்டைப் பெட்டியில் இரண்டு T-56 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள கடையொன்றிலேயே T-56 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கடையின் உரிமையாளர் நேற்று (14) பிற்பகல் இந்த இரண்டு துப்பாக்கி ரவைகள் இருப்பதை அவதானித்து, கடுகன்னாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
T-56 ரவைகள் மீட்கப்பட்டமை தொடர்பில் கடைக்கு முட்டை விநியோகம் செய்பவர் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.