யாழில் காதலன் கண்டித்தனால் 24 வயது ஆசிரியை தற்கொலை!

0
537

யாழ்.கலட்டி பகுதியில் ஆசிரியரான காதலி அவரது காதலன் கண்டித்ததினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (13-09-2022) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 24 வயதான சிவகுமாரன் நிருத்திகா என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த ஆசிரியர் தனது காதலனுக்கு தெரியாமல் நேற்று முன் தினம் நண்பி ஒருவரின் திருமண வீட்டுக்கு சென்றுள்ளார்.

காதலன் பல தடவை தொலைபேசி அழைப்பு எடுத்திருந்த போதும் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் காதலனால் ஆசிரியர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Lover Committed Suicide Reprimand Boyfriend Jaffna

பின்னர் குறித்த பெண் திருமண வீட்டுக்கு சென்ற சம்பவத்தினை தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த காதலன் ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என கண்டித்துள்ளார்.

இதனால் மனவிரக்தி அடைந்த காதலி இன்றைய தினம் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் காதலனால் ஆசிரியர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Lover Committed Suicide Reprimand Boyfriend Jaffna

குறித்த ஆசிரியரான பெண்ணின் உயிரிழப்பு ஆறு வருட காதலை முற்றுப்புள்ளிக்கு விட்டுச் சென்றுள்ளது. சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.