மன்னர் சார்லஸுக்கு தவறான வழியில் பிறந்த 14 பிள்ளைகள் இருக்கிறார்கள் என ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த செய்தி உண்மைதான் என்கிறது வரலாறு.
அந்த செய்தி உண்மையா? ஆம், அந்த செய்தி உண்மைதான்!
மன்னர் சார்லஸுக்கு தவறான வழியில் பிறந்த 14 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற செய்தி உண்மையானது தான்! ஆனால் அந்த சார்லஸ் தற்போது மன்னராகியுள்ள சார்லஸ் அல்ல.
விடயம் என்னவென்றால் இதற்கு முன்பே சார்லஸ் என்ற பெயருடைய இரண்டு மன்னர்கள் பிரித்தானியாவை ஆட்சி செய்துள்ளார்கள்.
மன்னர் முதலாம் சார்லஸ் என்பவர் 1625 முதல் 1649 வரை ஆட்சி செய்துள்ளார். அப்போது அவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரச்சினை ஏற்பட ஆங்கில சிவில் யுத்தம் என்று ஒரு யுத்தம் உருவாக அந்த யுத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து மன்னரைக் கைது செய்து கொலை செய்துவிட்டார்களாம். அப்புறம் கொஞ்சம் காலத்துக்கு பிரித்தானியா குடியரசு நாடாகக் கூட இருந்திருக்கிறது.

ஆனாலும், ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மன்னராட்சி கொண்டுவரப்பட முதலாம் சார்லஸ் மன்னருடைய மகனான இரண்டாம் சார்லஸ் 1660ஆம் ஆண்டு மீண்டும் மன்னராகியிருக்கிறார்.
இந்த இரண்டாம் சார்லஸ் ஒரு பார்ட்டி விரும்பியாம். 1685ஆம் ஆண்டு இந்த மன்னர் இரண்டாம் சார்லஸ் மரணமடைந்த போது அவருக்கு பல இரகசிய காதலிகள் மூலம் பிறந்த 14 பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு!
