சாம்பியன்களை மிஞ்சும் அமைச்சர்; சமூக வலைதளங்களில் விமர்சனம்

0
492

ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியினர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.

நாட்டுக்கு வந்த வெற்றி அணியினரை வரவேற்க விமான நிலையத்துக்குச் சென்ற விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க சென்றிருந்தார். இந்நிலையில் அமைச்சர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வலைப்பந்தாட்ட அணியினரை நடனக்குழுவினர் வரவேற்கும் போது அமைச்சர் விளையாட்டு அணிக்கு முன்னால் சென்றுள்ளார். சம்பியன் பட்டத்தை வென்றவர்களை  மறைத்து அமைச்சர் முன்சென்றமை தொடர்பில் விமர்சனங்கள்  எழுந்துள்ளன.

சம்பியன்களை முந்திய அமைச்சர்; சமூக வலைத்தளங்களில் விமர்சனம் | Minister Who Preceded The Champions