வீடொன்றில் தங்க நகைகளை கொள்ளையிட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை மரதன்கடவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மரதன்கடவல, மாமினியாவையிலுள்ள வீட்டொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை குறித்த வீட்டுக்குள் நுழைந்து தங்க நகைகளை திருடியுள்ளார்.

பொலிஸாருக்கு பறந்த தகவல்
இதை பார்த்த அயலவர் ஒருவர் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மரதன்கடவல பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை விரைந்து சென்று கைது செய்துள்ளனர்.

அத்துடன், சிப்பாயால் களவாடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.