போராட்டத்தில் குதித்த போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை ஊழியர்கள்

0
507

அரசாங்கத்திற்கு சொந்தமான போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது.

இந்த போராட்டம் போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணை வளாகத்திற்கு முன்பாக அங்கு பணி புரியும் சுமார் 150ற்கும் மேற்பட்ட ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது போபத்தலாவ தேசிய கால்நடை பண்ணையை விற்பதை உடனே நிறுத்து, அரசாங்கமே இந்த பண்ணையை தொடர்ந்து நடத்த வேண்டும், இலாபத்தை ஈட்டிக் கொடுக்கும் பண்ணையை தனியாருக்கு விற்காதே என வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் சுமார் 2 மணித்தியாலயங்கள் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் குதித்த ஊழியர்கள் | The Employees Jumped Into Protest

மேலும் இவ்வாறான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் இந்த விடயத்தில் அரசாங்கம் தலையீட்டு தொடர்ந்தும் அரசாங்கமே இந்த பண்ணையை நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.