பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தை ஹேக் செய்த மாணவர்

0
526

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பாடசாலை மாணவர் ஒருவர் ஹேக் செய்து பெறுபேறுகளை மாற்றியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இணையத்தளத்தை ஹேக் செய்த மாணவன்: உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பாதிப்பா? | Student Hacked The Exam Departments Website

சம்பந்தப்பட்ட மாணவர் துறை சார்ந்த இணையதளத்தில் இருந்து முடிவுத் தரவைப் பெற்று முடிவுகளை தனது இணையதளத்தில் வெளியிட முயன்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காலி பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.