இலங்கையில் தமிழ் தெரியாமல் வெட்கப்படுகிறேன்! – அமைச்சர் மனுஷ நாணயக்கார

0
562

பல மொழிகள் பேசப்படும் இந்த நாட்டில் என்னால் சிங்களம் மட்டும் பேச முடியுமென்பதை நினைத்து வெட்கமடைகின்றேன் என அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

நான் வாழ்கின்ற பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். தமிழ்மொழி இலங்கையின் அரச கரும மொழியாக இருக்கிறது.

ஆனால் என்னால் ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேச முடியும். வணக்கம் நன்றி போன்ற வார்த்தைகளை குறிப்பிடலாம்.

இலங்கையில் ஒரு இனப்பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. நான் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. எம்மிடம் காணப்படுகின்ற தொடர்பாடல் பிரச்சினையே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.

தொடர்பாடல் இடைவெளி இருந்ததால் நாம் நெருங்கி வரவில்லை. எம்மால் தொடர்புகளை ஏற்படுத்த முடியுமாக இருந்தால் அந்த பிரச்சினை வந்திருக்காது.

இந்த நெருக்கடிகள் மொழி தொடர்பான தெளிவின்மை அறிவின்மை காரணமாகவே உருவாகின என தெரிவித்துள்ளார்.