அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபருடன் புதிய பிரித்தானிய பிரதமர் பேச்சுவார்த்தை!

0
354

பிரித்தானியாவின் புதிய பிரதமரான லிஸ் டிரஸ் (Liz Truss) அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில்,

அமெரிக்கா, உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரித்தானிய புதிய பிரதமர்! | Uk Liz Minister Holds Talks Us Ukraine President

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசி மூலம் பேசினார். அப்போது பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

அமெரிக்கா, உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரித்தானிய புதிய பிரதமர்! | Uk Liz Minister Holds Talks Us Ukraine President

வடக்கு அயர்லாந்தில் அமைதியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

மேலும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார பிரச்சினைகளும் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரித்தானிய புதிய பிரதமர்! | Uk Liz Minister Holds Talks Us Ukraine President

இதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பிரித்தானிய  முழு ஆதரவளிக்கும் என்று டிரஸ் உறுதியளித்துள்ளார்.