அயர்லாந்தில் உடன் பிறந்தவர்கள் மூன்று பேரை கொன்றது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

எட்டு வயது இரட்டையர்களான செல்சியா (Chelsea ) மற்றும் கிறிஸ்டி காவ்லி (Christy Cawley) மற்றும் 18 வயதான லிசா கேஷ் (Lisa Cash) ஆகியோர் தெற்கு டப்ளினில் உள்ள தங்கள் வீட்டில் தாக்கப்பட்டனர் தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரோஸ்ஃபீல்ட் தோட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக 20 வயதுடைய ஒருவரை அயர்லாந்து பொலிஸ் கைது செய்து வருகின்றனர்.மேலும் அவர் டப்ளினில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


