பதவி ஆசை பிடித்த சஜித்: மஹிந்த அமரவீர அம்பலம்

0
614

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு சஜித் பிரேமதாச (Sajith Premadasa) எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார் என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்புக்கு ஊடகங்களிடம் பதில் வழங்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”சர்வகட்சி அரசு அமைக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவகாரத்திலும் அரசியலே நடத்துகின்றார்.

தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்கவே, சர்வகட்சி அரசை எதிர்க்கின்றார்.

பதவி ஆசை பிடித்த சஜித்துக்கு நாடு பற்றி எந்தக் கவலை இல்லை” என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.