நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று வந்தனர்.
அதன்பின் தங்களது படங்களின் வேளைகளில் பிசியாக இருந்து சில நாட்களுக்கு முன் மீண்டும் இரண்டாவது ஹனிமூனுக்கு சென்றுள்ளார்கள்.

அங்கிருந்து இருவரும் இணைந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு போட்டியாக மற்றொரு நட்சத்திர ஜோடி தற்போது ஹனிமூன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள்.

நிக்கி கல்ராணி – ஆதி
அவர்கள் வேறு யாருமில்லை நடிகை நிக்கி கல்ராணி – நடிகர் ஆதி தான். ஆம், ஆதி – நிக்கி கல்ராணி தற்போது பாரிஸுக்கு தங்களது 100வது திருமண நாளை கொண்டாட ஹனிமூன் சென்றுள்ளனர்.
அங்கிருந்து ஜோடியாக இருவரும் எடுத்துக்கொள்ளும் அழகிய ரொமான்டிக் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..


