பக்கத்து வீட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய பாதிரியார் கைது!

0
486

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பாதிரியார் ஒருவர் அண்டை வீட்டாரின் பூக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் போது, தவறாக கைது செய்யப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கறுப்பின மத போதகர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் தனது பக்கத்து வீட்டுக்காரர்களின் பூக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த போது ​​பொலிஸார் அவரை கைது செய்தனர்.

அலபாமாவில் உள்ள சைலகாகாவில் உள்ள விஷன் ஆஃப் அபண்டன்ட் லைஃப் சர்ச்சில் நீண்டகால போதகராக இருந்த மைக்கேல் ஜென்னிங்ஸ் ( Michael Jennings ) எனும் பாதிரியாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிரியார் கைது செய்யப்பட்ட police body cam வீடியோவை வெளியிட்டு சைல்டர்ஸ்பர்க் காவல் துறைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிரியாரின் சட்டத்தரணி கூறியுள்ளனர்.

பக்கத்து வீட்டு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய பாதிரியார்  கைது! | Priest Watered Neighbor S Plants Was Arrested

அதேவேளை குறித்த பாதிரியார் ( Michael Jennings ) கைது செய்யப்பட்ட போது மற்றொரு பக்கத்து வீட்டுக்காரர் இது தவறான புரிதல் என்று பொலிஸாரிடம் கூறியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.