இலங்கையில் முற்றாக முடங்கும் அபாயத்தில் வங்கி கட்டமைப்பு

0
368

வங்கி கட்டமைப்பு விரைவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு தவறான பொருளாதார முகாமைத்துவமே பிரதான காரணமாகும். நாட்டில் வங்கிகள் ஊடாக பெற்ற கடன்களை பல வங்குரோத்து அரச நிறுவனங்கள் செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Dr.-H.-M.-Nihal-Hennayake

நெருக்கடி நிலை

இலங்கையில் முற்றாக முடங்கும் ஆபத்தில் உள்ள வங்கி கட்டமைப்பு | Sri Lanka Economic Crisis Bank

இலங்கையில் கல்விக்காக 2021ஆம் ஆண்டு அரசாங்கம் சுமார் 200 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர், அந்த ஆண்டில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தில் மாத்திரம் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இதுவரையில் ஏற்பட்ட நட்டம் 700 பில்லியனை அண்மித்துள்ளதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழலில், சர்வதேச நாணய நிதியத்தின் மீது முழு நம்பிக்கை வைப்பதை விட, நாட்டிற்கு அதிக பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

முறையற்ற முதலீடுகள்

இலங்கையில் முற்றாக முடங்கும் ஆபத்தில் உள்ள வங்கி கட்டமைப்பு | Sri Lanka Economic Crisis Bank

அரச பல்கலைக்கழகங்கள் வழங்கும் இலவசக் கல்வியின் பெறுமதியை அவற்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் பேராசிரியர் நிஹால் ஹென்நாயக்க வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக நாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பல்வேறு துறைகள் உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்பற்ற முதலீடுகளால் நாட்டிற்கு சுமையாக மாறியுள்ள ஹம்பாந்தோட்டை மாநாட்டு மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய விசேட முதலீடுகள் தொடர்பிலும் உண்மைகளை வெளிப்படுத்துவது விசேடமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.