மிக சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தன் தீர்த்தோற்சவம்!

0
512

 வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவமான இன்றைய தினம் காலை விசேட பூஜைகள் நடைபெற்று மூலஸ்தானத்தில் வேலாக வீற்றிருக்கும் வேலன், வள்ளி தெய்வானை சமேதரராக வலம்வந்தார்.

அத்துடன் வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், தங்க மயில் வாகனத்தில் முருகப்பெருமானும் வலம் வந்தனர். அதேவேளை நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் திரண்டு நல்லூர் கந்தன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

வெகு சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் கந்தன்  தீர்த்தோற்சவம்! (Photos) | Nallur Kandan Thirthothsavam Jaffna

தொடர்ந்து இருபத்தைந்து நாள் கொண்ட நல்லூரானின் மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (26) மாலை கொடியிறக்கமும் சனிக்கிழமை(27) மாலை பூங்காவனமும் ஞாயிற்றுக்கிழமை(28) வைரவர் உற்சவத்துடனும் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery