இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு (2022) குறைந்தது 1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை இலங்கை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்தியா இடையிலான மத மற்றும் கலாச்சார சார்ந்த சுற்றுலா முறை மிகவும் அவசியமானது. நடப்பு ஆண்டில் இலங்கை ஏற்கனவே ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்துள்ளது.

மேலும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் இந்த ஆண்டை முடிக்கும் என்று நம்புகின்றோம்.
“யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு சுமார் 2,000 யாத்ரீகர்களை ஒரே நேரத்தில் ஒரு பெரிய கூட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம்.

எங்களிடம் ஆரோக்கியம், யோகா, தியானம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் உள்ளன. அத்துடன் இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள் நிறைய உள்ளன என தெரிவித்துள்ளார்.