வவுனியாவில் யாழ்ப்பாணத்திலிருந்து ஏ 9 வீதியூடாக கொழும்பு நோக்கி பயணித்த லொறியுடன் அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21-08-2022) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயதுடைய ஆனந்தகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அத்தோடு குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் லொறியானது சட்டவிரோதமாக கால்நடைகளை கொழும்பிற்கு ஏற்றிச்சென்ற வேளையே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.