சர்வகட்சி அரசாங்கத்தால் எவ்வித நன்மையுமில்லை!

0
482

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சி அரசாங்கம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு அரசாங்கம் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் என தான் எண்ணவில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது மக்களின் குறைகளுக்கு உடனடியாக தீர்வை கண்டறிவதே மிகவும் அவசியம் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.