தென்னிலங்கையில் நேற்றிரவும் இரு இடங்களில் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லுனுஹம்வெஹர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் போது 34 வயதான நபரே கொல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதேவேளை, காலி – அஹங்கம கொவியாபான பகுதியில் இன்றிரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். குறித்த இரு இடங்களிலும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் வெளிவராத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மே 30 ஆம் திகதி முதல் நேற்றுவரை 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், 23 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது