கோட்டாபயவின் பீர் குவளையை திருடிய நபர் கைது!

0
528

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது ​​கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ரங்கம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான சந்தேக நபர் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்பதுடன் குருநாகலில் வெல்லவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மேலும் இரு நண்பர்களுடன் ஜூலை 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்த பீர் போத்தலைக் கைப்பற்றிய குழுவினர் அந்த வளாகத்தில் இருந்த பீர் குவளைகளை பயன்படுத்தி மது அருந்தினர். இதன்படி சந்தேக நபர் பீர் குவளையை நினைவுப் பொருளாக மீண்டும் தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த நபர் ஜனாதிபதியின் வீட்டில் தனது நண்பர்களுடன் பீர் குவளையுடன் இருந்த புகைப்படத்தை தனது தனிப்பட்ட முகநூல் கணக்கில் பகிர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூலை 09ஆம் திகதி இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பான பேஸ்புக் உள்ளடக்கம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் வீட்டிற்கு சட்டவிரோதமாக பிரவேசித்தமை மற்றும் பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பீர் குவளையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கோட்டபாயவின் பீர் குவளையை திருடிய நபருக்கு நேர்ந்த கதி! | The Fate Of The Person Who Stole Gotabaya S Mug