ஜனாதிபதி ரணிலுக்கு அருகில் ஒற்றை சிவப்பு ரோஜா! ஒரு வைரலான புகைப்படம்

0
700

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரை இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது அடுத்த நாடாளுமன்ற அமர்வு இம்மாதம் 9 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கை விளக்க உரையாற்றினார்.

இதன் போது சபாநாயகர் மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒற்றை சிவப்பு ரோஜா சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளதுடன் குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.