காதலனுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற யுவதி நீரோட்டத்தில் சிக்கி மாயம்!

0
558

கல்பொட நீர்வீழ்ச்சியை பார்வையிட காதலனுடன் சென்ற யுவதி ஒருவர் நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போயுள்ளார். யாலேகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியே காணாமல் போயுள்ளார்.

திடீரென நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக தனது காதலி நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக குறித்த இளைஞன் தெரிவித்தார்.

காணாமல் போன யுவதியை தேடும் பணியை பொலிஸார், இராணுவம், கடற்படை மற்றும் பிரதேசவாசிகள் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.