முன்னாள் ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்திய நபர் கைது!

0
575

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வாசஸ்தலத்தில் இருந்து திருடப்பட்ட ஜனாதிபதியின் கொடியை குறித்த நபர் படுக்கை விரிப்பாக பயன்படுத்திய வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

கடந்த 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.