யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சியாளர் சகாதேவன் என்பவர் பாண் மாவுக்கான கோதுமைத் தாவரத்தை இலங்கையின் தட்பவெட்பநிலைக்கு ஏற்ப பயிரிடுவதில் வெற்றி கண்டுள்ளார்.
அவரது முயற்சியில் யாழ்ப்பாணத்தில் பயிரிடப்பட்ட பாண் கோதுமை தாவரத்தில் வெப்ப காலத்தில் பூ உருவாகியுள்ளது.
25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஆராய்ச்சியில் இதுவும் ஒரு மைல் கல்.
யாழ்ப்பாணம், வன்னி மற்றும் இலங்கை காலநிலைக்கேற்ற கோதுமை இனத்தை கண்டறிந்துள்ளார்.
கடும் வெய்யிலில் கூட கதிர் உருவாகியுள்ளது. விதை முளைப்புதிறன் சோதனைக்கு போடப்பட்ட சாடியில் தானியக் கதிர்கள் உருவாகியுள்ளது.
இன்னும் சிலவருடங்களில் சரியான அரசியல் சூழ்நிலை நீடித்தால் கோதுமை தன்னிறைவுக்கான அடித்தளம் இடப்படும்.
உண்மையில் பாராட்டப்பட வேண்டிய முயற்சியாளர்.
