கோட்டாபயவை இந்தியா வரவிடாமல் தடுத்த இந்தியக் கட்சி!

0
505
FILE PHOTO: Sri Lanka's former defense secretary Gotabaya Rajapaksa greets his supporters after his return from the United States, in Katunayake, Sri Lanka April 12, 2019. REUTERS/Dinuka Liyanawatte/File Photo

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மக்கள் எதிர்ப்பு காரணமாக மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு தப்பி சென்றுள்ளார். அவர் இந்தியாவுக்கு தான் தப்பி வர முயன்றார். ஆனால் ஏன் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது; இலங்கை தமிழர் பிரச்னையில் பிற இயக்கங்களை விட சமீபகாலமாக தமிழக பா.ஜ. மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. பல மறைமுக வேலைகளையும் செய்து வருகிறது.

ஒரு மாதத்துக்கு முன் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை இலங்கை சென்று வந்தார். அங்கு தமிழர்கள், தமிழின பிரதிநிதிகள், இலங்கை அரசு பிரதிநிதிகள், பல்வேறு கட்சி தலைவர்கள் என பலரையும் சந்தித்து பேசினார்.

கோட்டாபய இந்தியா வருவதை தடுத்த கட்சி எது தெரியுமா! | Do You Know Which Party Gotabaya To India

இலங்கையில் தான் சந்தித்த நபர்கள் அவர்களின் கருத்துக்கள் தமிழர் நலனுக்காக செய்ய வேண்டியவை குறித்த நீண்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது.

கோத்தபய ராஜபக்சேவை அப்புறப்படுத்த இலங்கை மக்கள் முடிவு எடுத்தனர். பல இடங்களிலும் வன்முறை வெடித்தது. இதையடுத்து இலங்கையில் இருந்து வெளியேற கோத்தபய முடிவு எடுத்தார். ஆரம்பத்தில் அவர் செல்ல இருந்தது அமெரிக்கா. அவர் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தவர்.

இலங்கையில் அதிபர் பொறுப்பேற்கும் முன் அதை ரத்து செய்தார். எனினும் பழைய குடியுரிமையை கூறி அமெரிக்காவுக்கு செல்ல துாதரகத்தை அணுகினார். ஆனால் அமெரிக்க துாதரக அதிகாரிகள் கை விரித்து விட்டனர்.

கோட்டாபய இந்தியா வருவதை தடுத்த கட்சி எது தெரியுமா! | Do You Know Which Party Gotabaya To India

இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறையில் இருக்கும் தன் நண்பர்கள் வாயிலாக இந்தியாவுக்குள் தஞ்சம் புக முயற்சி செய்தார். இதற்காக, ‘யுஎல்- 229’ என்ற விமானத்தை கோத்தபய தேர்வு செய்தார். இந்த விமானம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து குவைத் நாட்டுக்கு செல்லக் கூடியது.

கொச்சி வழியாக செல்லும் அந்த விமானத்தில் பயணித்து கொச்சியில் இறங்கி விடுவது என்பது தான் கோத்தபயவின் திட்டம். ஆனால், அது சரிபட்டு வராது என இந்திய அரசு கோத்தபயவிடம் கூறி விட்டது. அதன் பின்னரே கோத்தபய மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு சென்றார்.

இந்தியாவுக்குள் கோத்தபயவை அனுமதிக்க கூடாது என மத்திய அரசு வாயிலாக தடை போட்டவர் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தான். ஏராளமான இலங்கை தமிழர்கள் ராஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர்.

அதற்காக, தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் ராஜபக்சே குடும்பத்தினர் மீது கோபத்தில் உள்ளனர். இலங்கையில் 2009ம் ஆண்டு உள்நாட்டு போர் முடிந்து 13 ஆண்டுகளுக்கு பின் அங்குள்ள தமிழர்கள் நிலை மாறியுள்ளது.

அதற்கு இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமே காரணம். இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை பிரதமர் மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. எனவே, இலங்கை தமிழர்கள் பா.ஜ.வுக்கு ஆதரவான நிலையில் உள்ளனர்.

அண்ணாமலை

அண்ணாமலையின் இலங்கை பயணத்துக்கு பின் உலக அளவில் குறிப்பாக தமிழகத்தில் இலங்கை தமிழர் பிரச்சனையில் பா.ஜ.வின் அணுகுமுறையை பலரும் பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கும் ஈழ தமிழ் ஆதரவு குழுக்களின் ஆதரவை பெற பா.ஜ. முயற்சித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், ராஜபக்சே குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு இலங்கை தமிழ் ஆதரவாளர்கள் எதிர்ப்பை சம்பாதித்து விடக் கூடாது என்பதில் தமிழக பா.ஜ. தெளிவாக உள்ளது. இதையடுத்தே, ராஜபக்சே குடும்பத்தினருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை இவ்வாறு அவர்கள் கூறினர்.