இலங்கையில் திருமண நிகழ்வில் மணமகனுக்கு பரிசாக கிடைத்த பெற்றோல்

0
511

இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கறுப்புச் சந்தையில் சுமார் 2000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரை ஒரு லீற்றர் பெற்றோல் விற்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் புத்தளம் தில்லையடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் மணமகனுக்கு உறவினர் ஒருவர் பெற்றோல் அன்பளிப்புச் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மணமகனுக்கு பெற்றோல் அன்பளிப்புச் செய்யப்பட்டமை சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

மேலும், மணமகனுக்கு பெற்றோல் அன்பளிப்பு வழங்கிய நபர் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தேடி 3000 ரூபாவிற்கு கறுப்புச் சந்தையில் கொள்வனவு செய்ததாக இதன் போது தெரிவித்துள்ளார்.