மக்களை ஒடுக்க மீண்டும் அவசர சட்டத்தை எடுக்கிறதா அரசு!

0
669

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியை விட்டு செல்ல கோரி நாளை மறுதினம் 9ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக நாடு முழுவதும் அவசர சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி விகும் லியனகே உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

மக்களை  ஒடுக்க  மீண்டும் அவசரகாலச் சட்டத்தை கையில் எடுகின்றதா  அரசாங்கம்! | Is The Government Taking The Emergency Law Again

அதேசமயம் குறித்த கலந்துரையாடலில் இறுதித் தீர்மானம் இன்னும் எடுக்கப்படாத போதிலும் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.