எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் ஸ்போர்ட்ஸ் கார்! வைரலாகும் புகைப்படம்

0
609

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருகோணமலை அபயபுர சுற்றுவட்டாரத்திலுள்ள எரிபொருள் வரிசையில் விளையாட்டுக் கார் ஒன்றை இடம்பிடிப்பதற்காக நிறுத்திவிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த விளையாட்டுக் காருக்கு பின்னாலுள்ள வாகனங்களும் அதற்கு மதிப்பளித்து இடைவெளியை பேணிச் செல்கின்றமை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, இலங்கையில் உள்ள எரிபொருள் வரிசைகளில் விளையாட்டு கார் மட்டுமின்றி கற்கள், மரத்தடிகள், கதிரை, போத்தல்கள் என பல்வேறு பொருட்களும் வரிசையில் இடம்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.