பொருளாதார நெருக்கடியால் பள்ளி மாணவர்கள் ஆபத்தில்!

0
475

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் பேருந்து பயண கட்டணங்களும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுப்புவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.