சாய்ந்தமருதில் ஆறு பேர் பயணிக்கக்கூடிய ரிக்க்ஷா வண்டியை கண்டுபிடித்த நபர்

0
617

எரிபொருள் பிரச்சினை நாடளாவிய ரீதியில் தலைவிரித்தாடும் இன்றைய சூழலில் எரிபொருள் இல்லாமல் ஆறு பேர் பயணிக்கக்கூடிய புதிய போக்குவரத்து ரிக்க்ஷா வண்டியொன்று சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருதைச்சேர்ந்த முஹம்மது நிஸார் என்பவரே எரிபொருள் இல்லாமல் ஆட்களைச்சுமந்து செல்லும் வகையிலான புதிய ரிக்சா துவிச்சக்கர வண்டியொன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான இவர், சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக முழுமையாகச் செலவிட்டு குறித்த ரிக்ஷாவைக் கண்டுபிடித்துள்ளார். ஒரே நேரத்தில் 6 பாடசாலை மாணவர்கள் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வசதிகளை இந்த ரிக்சா கொண்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் பெட்ரோல் இல்லாத இக்காலபகுதியில் முச்சக்கரவண்டி இல்லாமல் கஷ்டப்படும் நிலையை கருத்திற்கொண்டே இதனை உருவாக்கியததாக முஹம்மட் நிஸார் தெரிவிக்கின்றார்.

மிக நீண்டகாலமாக வெல்டிங் வேலைகள் செய்து வரும் இவர், இவ்வாறான வண்டிகளை தொடர்ச்சியாக உருவாக்கி பயனாளிகளுக்கு வழங்கப் போவதாகவும், தற்போது இரண்டாவது வண்டியை உருவாக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.