நான் அவன் இல்லை; மறுக்கும் நாமல் ராஜபக்ச

0
760

கட்டாரில் உள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றில் தாம் அங்கத்துவம் பெற்றுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த நிறுவனத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது பெயரில் வேறு சிலரும் இருக்கலாம், ஆனால் அது கண்டிப்பாக தான் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சமூக வலைத்தள பதிவில் நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

குறித்த நிறுவனத்திடம் இருந்து கடன் அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.