மீன்பிடி இறங்குதுறையை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்

0
618

பள்ளிக்குடா, மண்பிட்டி பாரம்பரிய மீன்பிடி இறங்கு துறைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) பிரதேச கடற்றொழிலாளர்களினால் உருவாக்கப்பட்டுள்ள ‘தேவா கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

அத்துடன் பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், தற்போது நாடு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை வினைத் திறனாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் தெளிவுபடுத்தினார்.