ரஷ்யாவிற்கு பறக்கும் இலங்கை அமைச்சர்கள்!

0
459

இலங்கை அமைச்சர்கள் இருவர் நாளைய தினம் (27-06-2022) ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த இருவரும் ரஷ்யா பயணிக்கவுள்ளதோடு, இந்த பயணத்தின் போது எரிபொருள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக இலங்கைக்கு சாதகமான பதிலொன்றை எதிர்பார்ப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.