கொலை நடந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் கைது!

0
451

13 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளாச்சிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓஐசி, சிரேஷ்ட காவல் பரிசோதகர் மற்றும் காவல் உத்தியோகத்தர் ஆகியோரை எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்படவிருந்த சந்துன் லசித குமார விதான என்ற சந்தேக நபரை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரியவந்துள்ளது.

13 வருடங்களுக்கு முன்னர் கெசல்வத்தை காவல் பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை புகையிரத வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் படல்கம காவல் நிலைய அதிகாரிகள் சந்தேக நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

சட்டமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.