தந்தையர் தினம் – இலங்கையின் பொருளாதார நெருக்கடி! வைரலான புகைப்படம்

0
762

சர்வதேச ரீதியாக நேற்றைய தினம் (19-06-2022) தந்தையர் தினத்தை அனைவரும் நினைவுக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், இலங்கையிலும் இது தொடர்பில் நேற்று காலை முதல் பலரும் தமது தந்தையர்கள் தொடர்பில் தமது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தந்தையர் தினமும் - இலங்கை பொருளாதார நெருக்கடியும்! வைரல் புகைப்படம்

இணையத்தில் பதிவிடப்படும் சில பதிவுகள் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்பு கொண்டவையாக அமைந்துள்ளன.

அதில் ஒரு படம் உண்மையில் இலங்கையின் நெருக்கடியை மையப்படுத்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தந்தை ஒருவர் மரத்தில் ஏறிக்கொண்டிருக்க அவரின் மகன் அவரை பார்த்து கேட்கிறான் அப்பா! தந்தையர் தினத்தில் என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்?

அதற்கு வலப்பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அவரது மகள் கூறுகிறாள். அப்பா வாழ்க்கை செலவை பிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார் என்று.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியை அது படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.