மட்டு ஏறாவூரில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

0
602

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ஏறாவூர் மயிலம்பாவெளி துரைச்சாமி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சிறீதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வழமைபோல சம்பவதினமான நேற்று மாலை 04.00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியேறி மீன்பிடிப்பதற்காக குறித்த ஆற்றில் தோணியில் தனியாக சென்றார்.

எனினும் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில், இன்று வியாழக்கிழமை காலையில் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கடவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.