சூடான் அருகே ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுவாகின் துறைமுகத்தில் இருந்து 15 ஆயிரத்து 800 ஆடுகளை ஏற்றிக் கொண்டு, பத்ர்1 என்ற கப்பல் ஒன்று சவுதி அரேபியாவிற்கு புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் கப்பலில் ஏற்றக்கூடிய எடைக்கும் அதிகமான அளவில் ஆடுகளை ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே கப்பல் கவிழ்ந்தது. அதில் இருந்த பணியாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் கப்பலோடு கடலில் மூழ்கி இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


