ஆஸ்திரேலியாவில் யாழ் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

0
631

ஆஸ்திரேலியா – மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளதாக  தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ன் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பெண் தனது கணவருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பின்னர் தனது மூன்று வயதுக் குழந்தையோடு மெல்பேர்னுக்கு வந்துள்ளார்.

அங்கு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மெல்பேர்னில் தனது குடும்பத்துடன் இந்த பெண் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் உயிரிழந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை விக்டோரியப் பொலிஸார் மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த இளம் தாயாரின் உயிரிழப்பு dandenong பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.