அமெரிக்காவில் குத்துச் சண்டை அரங்கத்தில் அலறியடித்து ஓடிய ரசிகர்கள்!

0
691

அமெரிக்கா நியூயார்க்கில் குத்துச் சண்டை போட்டியிடையே துப்பாக்கிச் சூடு நடப்பதாக பரவிய வதந்தியை நம்பி அலறியடித்து ஓடிய பார்வையாளர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தனர்.

குத்துச் சண்டை போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக சிலர் கத்தியுள்ளனர்.

இதில் பதறிய மக்கள் உயிர் பிழைக்க அரங்கித்தில் அங்கிங்கும் ஓடத் தொடங்கினர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் காயம் அடைந்தனர்.

மேலும் சிலர் உயிர் தப்ப அரங்கத்தின் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தி தப்பினர்.