6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கவுள்ள ரணில்!

0
597

அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிவாரண திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார்.

அதன்படி, 6 வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரூபாய் வருமானமும் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உட்கட்டுமான வேலை திட்டங்களின் நிதி ஒதுக்கங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் நிவாரணங்களுக்காக ஒதுக்கப்படும். மேலும் எதிர்வரும் நாட்களில் நாட்டில் போராட்டங்கள் அதிகரிக்கக்கூடும்.

மக்கள், பாதிக்கப்படும் போது போராட்டங்கள் செய்ய வேண்டிய அவசியமாகும். ஆனால் அது அரசியல் கட்டமைப்பை பாதிக்காது என உறுதியளிக்க முடியும். மேலும் நாட்டின் பணவீக்கம் 40 சதவீதமாக உயர்வடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.